முழுமை. சுதந்திரம் பொறுப்புடன். நான் இப்பொழுது சமுதாயம். சாமான்யன். நடுவயது. இன்னும் இளவட்டம். வேலையும் செய்யும் மேலாளர். அப்பா. குடும்பத் தலைவன். பக்கத்து வீட்டு மாமா. இடம் பெயர்ந்த தமிழன். குடும்பஸ்தன். சம்சாரி.
நெஞ்சுக்குள்ளே நடுவில் ஒன்றரை அடி நீளம், உருண்டையாய் மேலும் கீழும் சற்று கூராய் அநேகமாய் இருப்பது தெரியாது
ஆள் அல்ல முகம் வைத்து அடையாளம் சேர்த்து நினைவில் கொள்ள குணம் என்று இல்லை நல்லது கெட்டது கற்பிக்க
பரமாத்மாவின் பரிமாணமாய் இந்த ஆத்மா இருப்பதாய் கேள்வி. அது எப்படி நானாகிறது அழுத்தமாய் மட்டும் உணரலாம். மனது பதறுகிறது, எதை பற்றி உய்பதென்று தவிக்கிறது.
அமைதியாய் ஆத்மா, ஜோதியாய், அதிக நேரம் தரிசனம் இல்லை. மனம் மீண்டும் வெல்கிறதோ.