சாலையில் செல்லும்போது யாரோ நிறுத்தி
இந்தா 200 கோடி;
கொடுக்கத்தோணியது கொடுத்தேன் வைத்துக்கொள் ...
என்றான்.
வாங்கிக் கொண்டேன்.
200 கோடி காசோலை வங்கியிலிட்டு
வரி செலுத்தி, கையில் மிச்சம் 140 கோடி
இருப்பதை உணர்ந்தேன்.
செலவுக்கெல்லாம் ஒரு கோடி போதும்
மீதி 139 கோடி வங்கியிலேயே இருக்கட்டும்
FDயில் போட்டு வைத்தால் ஒரு மாதம்
1 கோடி வரை வரும் என தீர்மானித்தேன்
இதை செலவு செய்வதெப்படி ?
பொண்டாடிக்கு மொத்தம் ஒரு கோடி கொடுத்து
தாய் வீட்டுக்கு அனுப்பலாமென்றிருந்தேன்.
அவளை கேட்டபொழுது, பணமெல்லாம் வேண்டாம்
உன்னோடு இருந்தால் போதுமென்றாள் ?!
வேலை விட்டு விடலாமா என யோசித்தால்
நேரத்தை கடத்தவே முடியாது என்று
வேலைக்கு தொடர்ந்து செல்ல தீர்மானித்தேன்.
நகரத்தில் மாந்தர் அதிகமிருப்பதால்
கிராமங்களிருக்கும் மக்களுக்கு இதை
செலவு செய்வது உசிதமென்று நினைத்தேன்
சொந்ததில் உள்ளவர்கெல்லாம் எதாவது
வசதிகள் செய்யலாம், பணமாயில்லை
ஆனால் அவருக்கு தேவையான விதமாய் எதாவது
சொந்த முயற்சியில் அடுத்தவர் பணத்துக்கு
ஆசைப்படாது வாழும் மனிதரை கண்டு
வருடதுக்கொருமுறை விருது கொடுக்கலாம் என்று
ஒரு யோசனை.
என் பிள்ளைகள் பள்ளிக்கு போய்தான் ஆகவேண்டும்
அவர் பள்ளிக்கு அருகில் வீடு அமைப்பது நல்லது
என்று தோணித்து.
இந்த பணம் என் அறிவை வளர்க்க உதவுமா
என்று வினா எழும்புகிறது. அதற்கு
இது அதிகம் உதவப் போவதில்லை
என்றே படுகிறது.
மகளைக் கேட்டேன், பணம் நிறைய
உனக்கு தந்தால் என்ன செய்வாய்.
வங்கியிலிட்டு அம்மா செருப்பு வாங்கித்
தரவில்லை என்றால் வாங்கிக் கொள்வேன்,
அம்மா பணம் மிச்சம் தானே ?!
அதற்கு மேல் அது வங்கியிலேயே
இருக்கட்டுமென்றாள்.
பாலிலே குளித்து, ரோஜாவில் தூங்க
சில நாள் உதவினாலும் என்னவோ
200 கோடி என் வாழ்க்கையை
பெரிதாய் மாற்றாதோ ?
அடுத்தவருக்காய் அதிகம் யோசித்து
மிச்சமிருப்பதை செலவு செய்வது
பெரிய தலை வலியாகவே போகிறது.
சரியானவருக்கு கொடுக்க வேண்டுமே.
கோடிகளைக் காசோலையாக்கி சாலையில்
காத்திருக்கிறேன், பணதுக்கு ரொம்ப
ஏங்குகிறவனாய் பார்த்து அப்படியே கொடுத்து
விடலாமென்று.
ஏன் தருகிறாய் என்றால்,
கொடுக்கத் தோணியது கொடுக்கிறேன் வைத்துக்கொள் ...
எனலாம்.