Monday, May 29, 2006

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சிறகு விரிக்க கற்ற காலத்தில்
தோளோடு தோள் சேர்ந்து பறந்த
என் தோழமைக்கு வணக்கம்:

இன்று ஊர் மாறி பறந்து வந்து
வெவ்வேறு காட்டில் வெவ்வேறு கூட்டில்
வசதியாய் இறுக்கிறோம்

பொழுது சாய்கையில், அமைதியாய் அமர்கையில்
மனது மீண்டும் அந்த
தோழமையின் தோள் வேண்டுதடா
சுயமாய் பறக்கக் கற்ற அந்த காற்று வேண்டுதடா

என் பிரிய நண்பா
நீ உன் கூடு உடைத்து உலகம் பார்த்த நாளில்
உன்னை மனமார வாழ்த்துகிறேன்
நீ
இன்னும் உயரமாய் பறக்க
இன்னும் சுகமாய் சிரிக்க

அன்புடன்,
மதன்.

1 comment:

kirubakaran said...

தீர்ந்தது பேனாவின் மையா !!!
இல்லை உன் வார்தைகலா .

துலைந்தது உன் எழுதுகொலா !!!
இல்லை உன் இதயமா .

வாழ்தியது எங்கலை தானா !!!
இல்லை வெரும் வார்தைகலா .